இந்திய நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பருவ கால மாற்றப் பிரிவுத் தலைவர் ராஜேந்திர பச்சோரி கூறுகையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கை விட டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி, பெங்களூர் தவிர லூதியானா போன்ற 2ம் நிலை நகரங்களிலும் சுற்றுச்சூழல் நிலை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார். இதற்கிடையில் உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசுபாடுள்ள 10 நகரங்களில் லூதியானா, கான்பூர் ஆகிய இரு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியி்ட்டுள்ளது
No comments:
Post a Comment