தண்ணீர் பயன்படுத்த தேவையில்லாத கழிவறையை அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. சூரிய ஒளி மின்சக்தியில் செயல்படும் இக்கழிவறையில் கழிவுகள் எரிக்கப்பட்டு கரியாக மாற்றப்படும்.
இதை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என இதை உருவாக்கிய விஞ்ஞானியான கார்ல் லிண்டன் தெரிவித்துள்ளார். புதுமையான இந்தக் கழிவறைகள் இம்மாத இறுதியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் 250 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கழிவறைகளை வடிவமைக்கவும், நிறுவவும் 5 கோடி ரூபாயை பில்கேட்ஸின் சமூக சேவை அமைப்பு வழங்கி உள்ளது
No comments:
Post a Comment