Friday, May 2, 2014

பிளாஸ்டிக்கை சேகரிப்பவர்களுக்கு தமிழகஅரசு விருதுகள் அறிவிப்பு

 
பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவதற்கு உதவியாக, மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று கிராமங்கள், மூன்று  சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மூன்று பசுமையான சுத்தமான பள்ளிகளுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.

ஊக்கத் தொகையின் விவரங்கள்
1) பிரிவு – சிறந்த கிராமங்கள் 
அ) தகுதியுடைமை
1) பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும்.
2) பசுமையான, சுத்தமான முன்னோடி கிராமமாக இருக்க வேண்டும்.
3) மழைநீர் சேகரித்தல், சூரிய சக்தி தகடுகள் நிறுவுதல், மரம் வளர்த்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கிராமங்களாய் இருக்க வேண்டும்.
     
ஆ) ஊக்கப் பரிசு விவரங்கள் 
முதல் பரிசு : ரூ.5.00 இலட்சங்கள் 
இரண்டாம் பரிசு : ரூ.3.00 இலட்சங்கள்
மூன்றாம் பரிசு : ரூ.2.00 இலட்சங்கள்
     இ) விண்ணப்பிப்பதற்கான வழிமுறை 
1) கிராமங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 2) கிராமங்களின் செயற்பாட்டின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்வார்கள்.
3) சிறந்த மூன்று கிராமங்கள் வல்லுநர் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
2) பிரிவு – சிறந்த சுயஉதவிக்குழுக்கள்
அ) தகுதியுடைமை அ) தகுதியுடைமை
 1) தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பதில் முக்கிய
பங்காற்றியிருத்தல் வேண்டும்.
2) பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வுப்பணிகள், துணிப்பைகள், காகிதப்பைகள், காகிதக்குவளைகள், சணல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
ஆ) ஊக்கப் பரிசு விவரங்கள் ஆ) ஊக்கப் பரிசு விவரங்கள்
முதல் பரிசு : ரூ.5.00 இலட்சங்கள்
இரண்டாம் பரிசு : ரூ.3.00 இலட்சங்கள்
மூன்றாம் பரிசு : ரூ.2.00 இலட்சங்கள்
இ) விண்ணப்பிப்பதற்கான வழிமுறை
1) சுயஉதவிக்குழுக்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.
2) மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் சுற்றுச்சூழல் துறைக்கு
சுயஉதவிக்குழுக்களை பரிந்துரை செய்தல் வேண்டும்.
3) சிறந்து விளங்கும் மூன்று சுயஉதவிக்குழுக்கள் வல்லுநர் குழுக்களால்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3) பிரிவு – பசுமையான, சுத்தமான பள்ளிகள்
அ) தகுதியுடைமை அ) தகுதியுடைமை
1) பிளாஸ்டிக் இல்லாத பசுமை மற்றும் சுத்தமான பள்ளிகளாக இருக்க
வேண்டும்.
2) கருத்தரங்குகள், நடைப்பயணம், பேரணி, முகாம், கருத்துப்பட்டறைகள்,
மரம் வளர்த்தல், போட்டிகள், பள்ளி வளாகத்தினை துhய்மையாக
வைத்திருத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை
மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
ஆ) ஊக்கப் பரிசு விவரங்கள்
முதல் பரிசு : ரூ.5.00 இலட்சங்கள்
இரண்டாம் பரிசு : ரூ.3.00 இலட்சங்கள்
மூன்றாம் பரிசு : ரூ.2.00 இலட்சங்கள்
இ) விண்ணப்பிப்பதற்கான வழிமுறை
1) பள்ளிகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்ப வேண்டும்.
2) முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்வார்கள்.
3) சிறந்து விளங்கும் பள்ளிகள் வல்லுநர் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதர விவரங்கள்
ஏற்கனவே பரிசு பெற்ற நிறுவனங்கள் / பள்ளிகள் / சுயஉதவிக்குழுக்கள்
விண்ணப்பிக்க இயலாது. விவரங்களை 6 நகல்களாக சமர்ப்பிக்க வேண்டும். 01.03.2013 முதல் 28.02.2014 வரையான காலத்திற்குள் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இந்த விவரங்களை சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்தின் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : www.environment.tn.nic.in
விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2014
மேலே குறிப்பிடப்பட்ட முறையில் இல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

No comments:

Post a Comment