Friday, May 2, 2014

66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
மாவட்டத்திற்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 250 மரக் கன்றுகள் வீதம் மாநிலம் முழுவதும் 66 லட்சம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை, மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்று ஒன்றினை நட்டு இத்திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியில் இருந்து 49 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி வரும் டிசம்பர் மாதத்திற்குள் 66 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வனப்பகுதிகளிலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், பூங்காக்கள், சாலையோரப் பகுதிகள் ஆகியவற்றில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து, பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment