ஐந்து மண்டல தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரங்கள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஆனந்த முருகன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, நெல்லை, கரூர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள், அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களை நட வேண்டும் என்று நீதிபதிகள் சதீஷ் கே. அக்னி ஹோத்ரி, சுதாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான பணிகளைப் பார்வையிட நீதிமன்றத்தின் சார்பில், வழக்கறிஞர் லஜபதிராயை நீதிபதிகள் நியமித்துள்ளனர். முன்னதாக, ஆனந்த முருகன் தொடர்ந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்லதாகவும், ஆனால், ஒப்பந்த தாரர்கள் அதனை செயல்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment